யால விவகாரம் – அமைச்சரின் சகோதரனின் மகன் கைதாகி பிணை விடுதலை. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 31 October 2022

யால விவகாரம் – அமைச்சரின் சகோதரனின் மகன் கைதாகி பிணை விடுதலை.

யால தேசிய பூங்காவிற்குள் வாகனம் ஓட்டியமை தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மூத்த சகோதரரின் மகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட அவர் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, சம்பவம் தொடர்பில் ஒன்பது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


இதேநேரம் குறித்த சம்பவத்தில் தனது மகனுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான குற்றச்சாட்டை அமைச்சர் மஹிந்த அமரவீர நிராகரித்திருந்தார். சம்பவம் நடந்த நாளில் தனது மகன் காலிக்கு அப்பால் பயணம் செய்ததற்கு போதிய ஆதாரங்கள் இருந்தால் அரசியலில் இருந்து விலகுவேன் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad