இந்த பச்சை ஆப்பிள்கள் விவசாயி எம்.லக்ஷ்மன் குமார தம்புத்தேகம, கல்கமுவவில் இரண்டு ஏக்கர் காணியில், அவரது ஆப்பிள் பண்ணை குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களில் அந்தப் பண்ணையை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு பதிலளித்த லக்ஸ்மன் குமார, ஆப்பிள் விதைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், முறையான பரிசோதனையின் பின்னரே ஆப்பிள் பயிர்ச்செய்கையை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த பயிர்ச்செய்கையை பிரபலப்படுத்துவதற்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்து வழங்க முடியும் எனவும், இலங்கையின் எந்தப் பகுதியிலும் பயிரிடக்கூடிய வகையில் இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமக்கு வழங்கப்பட்ட பச்சை ஆப்பிள்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பச்சை ஆப்பிள்களை ருசிப்பதையும் ஒரு குறிக்கோளாகக் கொண்டதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, பீ.ஜே.அசங்க லயனல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment