இந்நிகழ்வில் Spartans Sports Club மற்றும் Spartans Sports Academy சிறுவர்களுக்கு உதைபந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் அதிதிகளாக வைத்தியர் MNM தில்ஷான், GAfso அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் A.J.காமில் , Spartans Sports Club தலைவர் MNMH. அர்கம் உள்ளிட்ட அணியினர் கிராம சேவகர்களான ABM றமீஸ் , M உதய ராஜன், ஓய்வு பெற்ற தபால் அலுவலகர் ALM பஷீர் AYEVAC மாவட்ட பிரதிநிதிகளான AM. ஹிஷாம், CMM. சப்னாஸ்,M.ஜப்ரான், M.சர்பான் MTAH அன்பாஸ் என மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் சிறுவர்களின் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பில் Gafso அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் A.J காமில் உரையாற்றியதை தொடர்ந்து வைத்தியர் MNM தில்ஷான் விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான சிறுவர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.
நிகழ்வின் நன்றியுரையை Spartans Sports Club இன் தலைவரும் நிறுவுனருமான MNMH அர்கம் அவர்கள் சிறுவர் தின வாழ்த்து செய்தியுடன் அதிதிகளால் சிறுவர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment